ட்விட்டரில் இணைந்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதியதாக ட்விட்டர் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.


Advertisement

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கியுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் நிலையிலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை தொடங்காமலேயே இருந்துவந்தார்.


Advertisement

அண்மையில் லக்னோவில் நடந்த சந்திப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் ட்விட்டர் பக்கத்தை தொடங்குமாறு மாயாவதியை வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் மாயாவதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தைத் தற்போது தொடங்கியுள்ளார். ஊடகங்களிடமும், மக்களிடமும் தனது அரசியல் அறிவிப்புகளையும், கருத்துக்களையும் துரிதமாக கொண்டு செல்லும் முயற்சியாக மாயாவதி இதைத் தொடங்கியிருப்பதாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement