அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘அஜித்59’படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. 


Advertisement

பாலிவுட் ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் வேலைகளில் அஜித் மும்முரமாக இருக்கிறார். இந்தப் படத்தினை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது, ஸ்ரீதேவியிடம் ‘பிங்க்’ படத்தினை தமிழில் ரீமேக் செய்தால் அதில் தானே நடித்து தருகிறேன் என்று அஜித் சொன்னதாக போனி கபூர் முன்பே விளக்கமளித்திருந்தார். ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு அவரது கனவை அஜித் நிறைவேற்ற முன்வந்துள்ளார் என்றும் அவர் கூறியிருந்தார்.


Advertisement

இதனை ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.விநோத் இயக்கி வருகிறார். இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் அறிமுகமாகிறார். படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ஸ்ரத்தா, ஆண்ட்ரியா தாரங், அபிராமி வெங்கடாசலம் ஆகியோருக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. 

இந்நிலையில், இப்படத்தைப் பற்றிய புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் முதன்முறையாக கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தச் செய்தி வதந்தி மட்டும்தான் என ஜான்வி மறுத்துள்ளதாக தெரிகிறது. 


Advertisement

ஜான்வி, ‘தடாக்’படத்தின் மூலம் ஏற்கெனவே இந்தியில் நடிகையாக அறிமுகமாகியவர். இந்தப்படம் கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியானது. 41 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 110 கோடி வரை வசூலை ஈட்டியிருந்தது. இது ஒரு காதல் ரொமாண்டிக் படமாகும். 

அஜித்தின் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதுவரை இப்படம் சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் ‘ஏகே59’ என்ற ஹேஷ்டேக் மூலமே பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement