கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கடவுள் ஆசிர்வாதத்தில் வாழ்கிறார் என அம்மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
63 வயதாகும் கோவா முதலமைச்சர் மனோகர் கணைய கோளாறு காரணமாக உடல்நிலை சரியின்றி உள்ளார். கடந்த ஒருவருடமாக அவர் அமெரிக்காவின் நியூயார்க், டெல்லி எய்ம்ஸ், மும்பை மற்றும் கோவாவிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் கோவா சட்டமன்றத்திற்கு மூக்கில் ஒரு டியூப் பொருந்திய நிலையில் அவர் வருகை தந்தார். இதையடுத்து, கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தற்போது வரை அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை தொடர்பாக பேசிய கோவா சட்டமன்ற துணை சபாநாயகர் லோபோ, “பாரிக்கரின் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. அவர் முதலமைச்சராக இருப்பதால் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை. ஆனால் பாரிக்கரின் உடல்நிலை மோசமடைந்து அதன் காரணமாக அவருக்கு ஏதாவது நேர்ந்தால், இங்கு அரசியல் நெருக்கடி ஏற்படும்.
அவர் மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கிறார்” எனத் தெரிவித்தார். அத்துடன் “பாரிக்கர் இன்னும் வாழ்வதும், பணிபுரிவதும் கடவுளின் ஆசிர்வாதத்தால்தான்” எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது கோவாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி