சக மாணவருடன் காதல்: மகளையே கொன்றாரா தந்தை ?

Man-Allegedly-Kills-Daughter-Over-Relationship-With-Classmate

சக மாணவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக பெற்ற மகளை தந்தையே கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி. வயது 20. அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் வைஷ்ணவி தனது வீட்டில் சடலமாக கிடப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் விரைந்து வந்த போலீசார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.


Advertisement

அப்போது, வைஷ்ணவிக்கு அவருடன் கல்லூரியில் படிக்கும் சக ஆண் மாணவர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த மாணவர் வைஷ்ணவியின் ஜாதியை விட சற்று குறைந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் வைஷ்ணவி தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று வைஷ்ணவியின் தந்தை சந்தேகித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக வைஷ்ணவியின் தந்தை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒருகட்டத்தில் கோபம் அதிகரிக்கவே, வைஷ்ணவியை அவரது தந்தையை கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதன் காரணமாக அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தடவியல் துறை சோதனைக்கு பின்னரே கொலையா..? இறந்தது எப்படி என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement