[X] Close

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை... கோலி, பும்ரா முதலிடம்..! 

Subscribe
Bumrah-and-Virat-Kohli-keep-their-top-slot-in-ICC-ODI-rankings

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியலில் இந்திய அணி 2 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.


Advertisement

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும், பந்து வீச்சாளர்களில் பும்ராவும், முதலிடத்தில் தொடர்கின்றனர். பேட்டிங்கில் 887 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்திலும், 854 புள்ளிகளுடன் ரோகித் ஷர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் நியுசிலாந்தின் Ross Taylor இங்கிலாத்தின் ஜோ ரூட்டு நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான்  744 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் 10 இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி 688 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் 17 இடத்திலும் உள்ளனர்.

Related image


Advertisement

பந்துவீச்சாளர்களில் 808 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும், 788 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர்  பந்துவீச்சாளர்களுக்கான தரநிலையில் நான்காவது, ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள். ஆல் ரவுண்டர்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை. முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும், இரண்டாவது இடத்தில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹாசனும், மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபியும் இடம்பிடித்துள்ளனர்.

Image result for Kohli, Bumrah

மேலும் ஒருநாள்‌ கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர்களைப் கைப்பற்றி‌யதை அடுத்து 122 புள்ளி‌களோடு இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close