[X] Close >

இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி. கிரிக்கெட் அணி!

Starc-s-ten-for-powers-Australia-towards-crushing-victory

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வி அடைந்தது.


Advertisement

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற் றது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்து வந்தது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 534 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 161 ரன்னும் ஜோ பர்ன்ஸ் 180 ரன்னும் பேட்டர்சன் 114 ரன்னும் எடுத்தனர்.


Advertisement

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 215 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின் இரண்டாவது இன்னிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 101 ரன்களும் டிராவிஸ் ஹெட் 59 ரன்களும் எடுத்தனர்.


Advertisement

வெற்றிக்கு 516 ரன் தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியினரின் வேகப்பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

இதனால் இலங்கை 149 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

ஆட்டநாயகன் விருது ஸ்டார்க்குக்கும் தொடர் நாயகன் விருது கம்மின்ஸுக்கும் வழங்கப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close