‘தளபதி63’ படத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’ திரைப்படத்தில் நடித்த ராஜ்குமார் இணைய உள்ளார்.
‘சர்கார்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ‘தளபதி 63’.இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் விஜய் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதிலும் விஜய் கால்பந்து ஆட்டப் பயிற்சியாளராக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விஜயுடன் ஏற்கனவே ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக், யோகிபாபு,‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் நடித்த கதிர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இப் படத்தில் ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்படிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இந்தத் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கும் வரும் படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி