[X] Close >

பெங்களூர் 6 வழிச்சாலையை எட்டிய பிரம்மாண்ட கோதண்டராம சுவாமி சிலை

kodanda-rama-perumal-statue-reached-krishnagiri-bengaluru-6-ways

பல்வேறு போராட்டங்களை கடந்து விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை 55 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி தேசிய ஆறு  வழிச்சாலையை வந்தடைந்தது. 


Advertisement

கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இச்சிலை செய்ய 350 டன் எடை கொண்ட பாறை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட இந்தப் பாறையில் முகம் மட்டும் வடிவமைக்கப்பட்டு கடந்த மாதம் ‌ஏழாம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. ‌

இதுவரை தேசிய மற்றும் மாநில இரு வழிச்சாலைகளில் சவால் விடும் வகையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பயணித்து வந்த சிலை நேற்று மாலை கிருஷ்ணகிரி நகர எல்லையான திருவண்ணாமலை சாலைக்கு வந்தது போதிய முன்னேற்பாடு காரணங்களால் அங்கே நிறுத்தப்பட்டது.


Advertisement

            

இதனைத் தொடர்ந்து, இன்று காலை பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை தேசிய ஆறு வழிச்சாலையை வந்தடையும் வகையில் முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டு முதலில் போக்குவரத்து வழித்தடங்கள் உறுதி செய்யப்பட்டன. சிறு பாலங்களுக்கு மூட்டு கொடுக்கப்பட்டு சாலை தடுப்புகள் அகற்றபட்டது  அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை சாலையிலிருந்து கோதண்ட ராமர் சிலை சென்னை-பெங்களூரு தேசிய ஆறு வழிச்சாலையை எட்டியது. இதனை காண கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோதண்ட ராமர் சிலையை கண்டு ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என்ற முழக்கத்துடன் வணங்கினர் 

இதுவரை தேசிய மற்றும் மாநில சாலைகளை கடந்து வந்த கோதண்ட ராமர் சிலை, தற்பொழுது கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய ஆறு  வழி சாலை எட்டியுள்ள நிலையில், இனி விரைவும் செல்ல முடியும் என்பதால் பயணக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓரிரு வாரத்தில் பிரம்மாண்ட கோதண்ட ராமர் சிலை பெங்களூர் ஈஜிபுரா பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close