ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்,குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரராக டுவைன் ஸ்மித், மெக்கலம் களம் இறங்கினர்.கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் முதல் ஓவரிலே டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.பின்னர் வந்த ரெய்னா மெக்கலத்துடன் இனைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அணியின் ஸ்கோர் 81 ஆக உயர்ந்த போது பிரிந்தது. ஹர்பஜன் சிங் பந்தை அடித்து ஆட நினைத்த ரெய்னா ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.அரைசதத்தை கடந்த மெக்கலம், மலிங்கா பந்துவீச்சீல் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கலம்(64), தினேஷ் கார்த்தி(48) ரெய்னா(28) ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பார்தீவ் படேல் முதல் ஓவரிலே வெளியேறினார். மும்பை அணியில் இளம்வீரர் நிதிஷ் ரானா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அணியின் ஸ்கோர் 85 ஆக உயர்ந்த போது நிதிஷ் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா,பொல்லார்ட் இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் ரானா (53), பொல்லார்ட்(39), ரோஹித் ஷர்மா(40) ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியில் டை 2, முனாப் பட்டேல், பிரவீன் குமார் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!