“பிரதமரின் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒரு தேசிய பேரிடர்” - ராகுல் காந்தி

Congress-Leader-Rahul-Gandhi-comment-about-PM-Modi-Job-Scheme

பிரதமர் நரேந்திர மோடியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒரு தேசிய பேரிடர் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 


Advertisement

ஹவ்திஜாப்ஸ் (#howsthejobs) என்ற ஹேஸ்டாக்கில் டிவிட்டரில் ராகுல் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற மோடியின் 2014ஆம் ஆண்டின் வாக்குறுதி கொடூரமான நகைச்சுவை என்று அவர் விமர்சித்துள்ளார். புள்ளிவிவர அடிப்படையில், 2017-18ஆம் ஆண்டு வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 6 கோடியே 5 லட்சமாக இருப்பதாகவும், 45 வயது வரை வேலை கிடைக்காதோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

ராகுலைத் தொடர்ந்து காங்கிரஸைச் சேர்ந்த சுர்ஜிவாலா, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோரும் தங்கள் கருத்துக்களை இந்த ஹேஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே 2017-18ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்‌கை 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement