[X] Close >

பிரதமரை தவறாக சித்தரித்ததாக மதிமுக நகர செயலாளர் கைது

A-person-arrested-for-posting-Modi-s-image-as-begging-on-Facebook

சீர்காழில் பிரதமர் மோடி உருவபடத்தை முகநூலில் பிச்சை எடுப்பது போல் சித்தரித்து பதிவிட்ட மதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

Image result for மதிமுக நகர செயலாளர் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மதிமுக நகர செயலாளராக சத்தியராஜ் பாலு என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி தனது முகநூலில் மதுரைக்கு வரும் மோடி என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் உருவபடத்தை பிச்சை எடுப்பது போல் சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


Advertisement

 Image result for go back modi twitter

அந்த புகாரின் பேரில் விசாரனை செய்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேல், திருஞானசம்பந்தர் நகரை சேர்ந்த மதிமுக நகர செயலாளராக  சத்தியராஜ்பாலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ்  ம.தி.மு.க நகர செயலாளர் சத்தியராஜ்பாலுவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். முகநூல் பதிவிற்காக மதிமுக நகர செயலாளர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்ட சம்பவம் சீர்காழியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close