சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றும்போது ரயில் நிலைய துணை அதிகாரி செல்போனில் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதுதவிர அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டும் சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பு வாயிலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது, ரயில் நிலைய துணை அதிகாரி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தாமல் அந்தநேரம் பார்த்து தனது செல்போனில் பேசுகிறார். தனது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து அதனை அவர் காதில் வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அதில் “ கொடியேற்றம் நடைபெற்ற உடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இசைக்கப்படவில்லை, தேசிய கீதத்தை இசைக்குமாறு சம்பந்தப்பட்ட ஆடியோ இன்ஜினீயர்க்கு தகவல் வழங்கவே ரவிக்குமார் தொலைபேசியை உபயோகித்துள்ளார். இனி இது போன்ற தவறு நிகழாததை உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி