தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா மறுப்பு தெரிவித்துள்ளார்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பத்ம விருதில், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களில் 21 பேர் பெண்கள். 11 பேர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒருவர் திருநங்கை. தமிழகத்தில் 8 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் 94 பேரில், அமெரிக்காவில் வசிக்கும் எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். இவர் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரி. இவர் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மறுத்துள்ளார்.
நியூயார்க்கில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பத்ம விருதுக்கு நான் தகுதியானவள் என மத்திய அரசு நினைத் ததில் பெருமை படுகிறேன். ஆனால், பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது தவ றான எண்ணத்தை தோற்றுவிக்கும். அரசுக்கும் எனக்குமே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் இதை ஏற்க இயலாது. இதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!