‘மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்’- பிரதமருக்கு எடப்பாடி கடிதம்

mekedatu-dam-issue-tamilnadu-cm-edappadi-palanisamy-sent-letter-to-pm-modi

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை, நிராகரிக்க வேண்டுமென பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகா தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக‌ அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். 

விரிவான‌ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு உத்தரவிடுவதற்கு‌ முன்பே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 


Advertisement

               

மேலும், காவிரி தொடர்புடைய மாநிலங்களின் அனுமதியின்றி ‌எந்த மாநிலமும் தன்னிச்சையாக எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதியில்லை என நீதிமன்றம் கூறியிருப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில், கர்நாடக அரசு தாக்கல் செய்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை, பிரதமர் மோடி நிராகரிக்க வேண்டுமென முதலமை‌ச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்த நிலையில், முதலமைச்‌சர் எடப்பாடி பழனிசாமி பிரத‌மருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement