Advertisement

அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்த நினைக்கிறது - ராகுல் காந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவி அதனை கட்டுப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


Advertisement

ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் புவனேஸ்வரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல் கட்டமாக அறிவுசார் கருத்தியலாளர்களுடன் ராகுல் உரையாடினார். ஆர்.எஸ்.எஸ், பாஜகவை பற்றி கடுமையாக அவர் விமர்சித்தார். 

      


Advertisement

ராகுல் பேசுகையில், “நாட்டில் தாங்கள் மட்டும்தான் ஒரே ஒரு அமைப்பு உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அது நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஊடுருவி கட்டுப்படுத்தப் பார்க்கிறது. இந்தியா 120 கோடி மக்களால் வழிநடத்தப்படுகிறது என்று நாம் நம்புகிறோம். ஒரு தரப்பு மக்கள், ஒரு தரப்பு கொள்கை மட்டுமே ஒரு நாட்டை வழிநடத்தக் கூடாது. 

நடுத்தர மக்கள் தரமான கல்வியைப் பெற கோடிக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. அதேபோல்தான் தரமான, சுகாதரம் பெறுவதற்கும். இது மாற்றப்பட வேண்டும். 

     


Advertisement

நரேந்திர மோடி பிரதமராக கூடாது என நான் எதிர்த்தாலும் அவரை வெறுக்கவில்லை. எனக்கும் பிரதமர் மோடிக்கும் கருத்து மோதல் இருந்தாலும் அவரை வெறுக்கவில்லை. தனது கருத்தை தெரிவிக்க மோடிக்கு உரிமை உண்டு. பாஜகவும், ஆ.எஸ்.எஸ்-ம் சேர்ந்து என்னை வசைபாடும் போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்” என்று கூறினார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement