கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்

Former-minister-Senthil-Balaji-appoints-as-Dmk-Karur-district-guardian-by-party-head

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.


Advertisement

இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நன்னியூர் ராஜேந்திரன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நெசவாளர் அணித் தலைவராக நன்னியூர் ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர் நிர்வாகிகள் செந்தில் பாலாஜியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் திமுக தலைமை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


Advertisement

         

அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி அண்மையில், தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதாவது 18 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில்பாலாஜி மீண்டும் அதே கட்சியில் இணைந்தார்.

            


Advertisement

ஸ்டாலினின் கொள்கை பிடிப்பால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்ததாக அதற்கு காரணம் தெரிவித்திருந்தார் செந்தில் பாலாஜி. அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement