பெண்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான இடைக்கால தடையை பிசிசிஐ திரும்ப பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் கரண் ஜோஹரின்‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது பெரும் பிரச்னையானது. இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவில் விளையாட சென்றிருந்த இருவரும் நாடு திரும்பினர்.
இவர்கள் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, விசாரணை அதிகாரியை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் வர இருக்கிறது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான இடைக்கால தடையை பிசிசிஐ திரும்ப பெற்றுள்ளது. விசாரணை அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமித்த பின்னர், இருவர் மீதான விசாரணை தொடரும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரிய, பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா உள்ளிட்ட பலரும் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களில் விசாரணை நிலுவையில் உள்ள வீரர்கள் பலரும் விளையாடி வரும் நிலையில், இவர்கள் மீது மட்டும் ஏன் தடை என்று பிசிசிஐ அதிகாரிகள் சிலரே கருத்து தெரிவித்து இருந்தனர்.
தங்கள் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில், அடுத்து வரும் தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் விளையாட வாய்ப்புள்ளது.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்