அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் வம்சாவளி வேட்பாளருக்கு குவிந்தது நன்கொடை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை கிடைத்துள்ளது.


Advertisement

2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட இருக்கிறார். இவரது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். 54 வயதான கமலா, குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 4-வது பெண்.


Advertisement

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தான் இருப்பதாக கமலா அறிவித்த 12 மணி நேரத்தில் 10 லட்சம் அமெரிக்க டாலரையும், 24 மணி நேரத்தில் 15 லட்சம் அமெரிக்க டாலரையும் அவர் நன்கொடையாகப் பெற்றுள்ளார்.

சுமார் 38 ஆயிரம் பேர் கமலாவுக்கு நன்கொடைகள் வழங்கியுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இந்திய அமெரிக்கர் ஒருவர் தேர்தலில் போட்டி யிட 24 மணி நேரத்துக்குள் அதிக நிதி திரட்டியது இதுதான் முதன் முறை. இதற்காக, தனக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு அவர் நன்றி தெரி வித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement