சென்னையில் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக காவல்துறையி‌ல் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதனும், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் தொடங்கி வைத்தனர்.


Advertisement

குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை விதைக்கும் வகையில் கல்வித்துறை மற்றும் காவல்துறை இணைந்து பள்ளி மாணவர்களைத் தயார் செய்யும் நிகழ்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை, வருவாய்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து, மாணவர் காவல் படை என்ற அமைப்பை தொடங்கியுள்ளன. இதுகுறித்த நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்டக் கல்வி அலுவலர் வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று மாணவர் படையை தொடங்கி வைத்தனர். 


Advertisement

இந்நிகழ்ச்சியில் மாணவர் காவல் படையில்138 பள்ளிகளில் இருந்து, 6 ஆயிரத்து 72 மாணவ, மாணவியர் உறுப்பினர்களாக இணைந்தனர். இந்தப் படையில் சேரும் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, சமூக தீமைகளுக்கு எதிராக பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக காவல்துறையில் உள்ள காவல் ஆணையரகங்களில் முதன்முறையாக சென்னை பெருநகர காவல்துறையில் மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement