சென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் ! அரும்பாக்கத்தில் நேர்ந்த கொடூரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அரும்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஒருவர் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பரபரப்பான சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரிக்கு எதிரே ஆட்டோ ஒன்று வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கிருந்த உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர். அதேவேளையில் அவர்களை கண்டதும் உணவகத்திற்கு உள்ளே இருந்து ஒருவர் வெளியே ஓட ஆட்டோவில் வந்தவர்கள் அவரை துரத்திச் சென்றுள்ளனர். சாலையை கடந்து ஓடியவரை விரட்டிச் சென்ற கும்பல் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் சரமாரியாக வெட்டிச்சாய்த்தது. தாக்கப்பட்ட நபர் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


Advertisement

கொலை செய்த கும்பல் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு தப்பிவிட்டனர். இந்நிலையில் தகவலை அறிந்து சம்பவ நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. விசாரணையில் கொல்லப்பட்டவர் சூளைமேட்டைச் சேர்ந்த குமரேசன் என்றும் அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தெரிவித்த போலீசார், மாவா வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தவர் குமரேசன். வெங்கடேசனை பிரிந்து குமரேசன் தனியாக தொழில் செய்ய தொடங்கியுள்ளார். அப்போது இருதரப்பும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 


Advertisement

2015ஆம் ஆண்டு வெங்கடேசன் தரப்பைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை குமரேசன் கொலை செய்ததாக தெரிகிறது. அதற்கு பழிக்குப்பழியாக குமரேசனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கலாம். வெங்கடேசன் தரப்பைச் சேர்ந்த சகாயம், பாம்பு தினேஷ் மற்றும் கூட்டாளிகள் குமரேசனை கொலை செய்துள்ளனர். அவர்களை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement