JUST IN

Advertisement

ரசிகர்களே வெளியிட்ட‘விஜய்63’பட ஃபர்ஸ்ட் லுக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘விஜய்63’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதற்குள், பேன் மேட் போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.


Advertisement

‘சர்கார்’படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அதனால் ‘விஜய்63’ என அழைக்கப்பட்டு வருகிறது. ஏற்னெனவே அட்லி- விஜய் இருவரும் ‘தெறி’,‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன. அந்த வகையில் தற்போது ‘விஜய்63’படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement

இந்நிலையில் ‘விஜய்63’ படத்தின் பேன் மேட் போஸ்டரை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. படக்குழு சார்பில் இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘விஜய்63’ படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் கதிர், விவேக் உள்ளிட்டோரும் நடிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்து உள்ளன.  முன்னதாக ‘விஜய்63’படப்பிடிப்பு பூஜை தொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடிருந்தது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் பலரையும் கைகுலுக்கி வரவேற்பதும், படக்குழுவினர் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்குவதும் இடம்பெற்றிருந்தது. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement