சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி பழத்தின் நிறமும், சுவையும் மாறாமல் அதன் புளிப்பு சுவையை காரமாக மாற்றி அறிவியல் ஆய்வாளர்கள் புதிய சாதனைப்படைத்துள்ளனர்.
சமீப காலமாக மரபணு பொறியியல் தொழில்நுட்பங்கள் பிரபலமாகிவருகிறது. அனைத்து விதமான தாவரங்களிலும், விலங்குகளிலும் கூட சிறிய மரபணு திருத்தங்களை செய்வது சாத்தியம் என்பதை அவ்வப்போது ஆய்வாளர்கள் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் தக்காளி பழத்தை மரபணு மாற்றம் செய்து பிரேசில் நாட்டை சேர்ந்தவர் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
தக்காளி என்றால் பிடிக்காதவர்கள் யாருமில்லை. அதற்கு காரணம் அதன் புளிப்பு சுவைதான். குழந்தைகளை கவரும் வகையில் இன்றைய தக்காளிகளின் வடிவம் உருமாறி சாஸ் வடிவில் பாட்டில்களில் கிடைப்பதுண்டு. சருமத்திற்கும், உடலுக்கும் நல்ல மருத்துவகுணம் கொண்ட பழமாக பார்க்கப்படும் தக்காளியின் மரபணுவில் சில மாற்றங்களை ஆய்வாளர்கள் செய்துள்ளனர். தனக்கே உரிய புளிப்பு குணத்தைக்கொண்ட தக்காளியின் வடிவத்தை மாற்றாமல் சுவையை மட்டும் காரமாக மாற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.
'CRISPR' முறையில் மரபணுக்களை மாற்றவோ, அகற்றவோ முடியும் என்பதால், இந்த முறையை பயன்படுத்தி தக்காளிக்குள் கேப்சைசின் என்ற வேதிப்பொருளை உட்புகுத்த முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். கேப்சைசின் என்பது மிளகுகளில் காரம் தரும் பொருளாகும். ளான்ட் சயின்ஸ் எனும் இதழில் வெளியிடப்பட்டு உள்ள ஒரு ஆய்வின்படி, மரபணு பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஜீன் எடிட்டிங் முறையில் தக்காளியினுள் காப்சைசின் மூலக்கூறுகளை உற்பத்தி செய்யமுடியும்.
தக்காளியினுள் காப்சைசின் பொருட்கள் சேர்ந்தால் தக்காளி காரசக்தியினை பெறும். இதனால் தக்காளியினுள் ஆன்டிஆக்சிடன்கள் அதிகரிக்கும். இது உடல்வலியை குணப்படுத்தும் நிவாரணியாக பார்க்கப்படுகிறது. மேலும் உடல் எடை குறைப்புக்கு ஆன்டிஆக்சிடன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஜீன் எடிட்டிங் முறையில் மிளகின் நன்மைகளை தக்காளியினுள் புகுத்தமுடியும். இது சாத்தியமாகும் பட்சத்தில் ஒரே பழத்தில் புளிப்பு, காரம் கொண்ட இரு சுவைகளை கொண்டுவரமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்