JUST IN

Advertisement

உலக அளவில் வைரலாகும் #10yearchallenge! பின்னணியில் சதித்திட்டமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் #10yearchallenge சவால் ஹேஷ்டாக் வேடிக்கையாக இருந்தாலும், இதில் விபரீதம் ஏதும் மறைந்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Advertisement

பேஸ்புக்கில் தொடங்கப்பட்டு, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த #10yearchallenge ஹேஸ்டேக்கில் பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். தற்போதைய புகைப்படத்துடன், 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை இணைத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஹாஷ்டாக்கை பயன்படுத்தி, 10 ஆண்டிற்கு முன்பும், தற்போதும் ஒரே நிலைதான் இருக்கிறது என்ற ரீதியில் மீம்ஸ்கள் பல பதிவிடப்படுவதையும் பார்க்க முடிகிறது


Advertisement

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு முகமறிதல் அஃதாவது FACE RECOGNITION தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய போது, அதனை மேம்படுத்த தேவையான தரவுகளை பெறுவதற்காக அந்நிறுவனம் இந்த பிரசாரத்தை ரகசியமாக முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காகவே #10yearchallenge ஹேஷ்டேக் தொடங்கப்பட்டதா என்ற கேள்வியும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால், #10yearchallenge ஐ பயன்படுத்துவதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா என்ற அச்சமும் எழுப்பப்படுகிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், #10yearchallenge ஹேஷ்டேக் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களாலேயே உருவாக்கப்பட்டது என்றும் இதற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.


Advertisement

#10yearchallenge  மட்டுமல்ல, ‌பொதுத்தளத்தில் பதியப்படும் இதுபோன்ற எந்தத் தரவுகளையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement