ம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக வசம் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சராக கமல்நாத் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மன்ட்சார் பகுதி பாஜக தலைவர், பிரபகலாத் பந்த்வார் (50) என்பவர் நிலத் தகராறு காரணமாகப் பட்டப் பகலில் சுட்டுக்கொல்லப் பட்டார். இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

இந்நிலையில் பர்வானி பகுதியில், வாக்கிங் சென்ற பாஜக தலைவர் மனோஜ் தாக்கரேவை ஒரு கும்பல் கொன்றுள்ளது. சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாகக் கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வாரத்துக்குள் இரண்டு பாஜக தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ’’குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளது.

‘’இந்த கொலை தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடந்துவருகிறது. குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள். இதுபோன்ற கொலை சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பாதுகாப்பை அதிகப்படுத்தவும் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார் மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement