[X] Close >

இங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்!

Rishabh-Pant--Ajinkya-Rahane-to-play-for-India-A-against-England-Lions

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

இங்கிலாந்து லயன்ஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வருகிறது. ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளுக்கு ரஹானே தலைமையில் ஓர் அணியும், கடைசி இரண்டு போட்டிகளுக்கு பாவ்னே தலைமையிலான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அணி விவரம்:
முதல் 3 போட்டிகளுக்கான அணி:
ரஹானே (கேப்டன்), அன்மோல்ப்ரீத் சிங், ரிதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, அங்கித் பாவ்னே, இஷான் கிஷான் (விக் கெட் கீப்பர்), குணால் பாண்ட்யா, அக்சர் படேல், மயங்க் மார்க்கண்டே, ஜெயந்த் யாதவ், சித்தார்த் கவுல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

4 மற்றும் 5 -வது போட்டிக்கான அணி:
அங்கித் பாவ்னே (கேப்டன்), ரிதுராஜ் கெய்க்வாட், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி பூய், சித்தேஷ் லாட், ஹிம்மத் சிங், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி, அவேஸ் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.


Advertisement

இதுதவிர இஷான் கிஷான் தலைமையிலான போர்ட் பிரசிடென்ட் லெவன் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பைப் போட்டி நெருங்கும் நேரத்தில் இந்த ஒரு நாள் போட்டிகளில் ரஹானே சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் சேர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close