தனுஷின் ‘மாரி 2’ படத்தின் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையை கடந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் மாரி. இந்தப்படம் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் ‘மாரி 2’ என்ற பெயரில் வெளியாகியது.
இந்த படத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்திற்கு, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். மேலும் இசைஞானி இளையராஜா ‘மாரி 2’வில் ஒரு பாடலை பாடினார்.
தனுஷ்-யுவன் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், படத்தின் பாடல்கள் பிரபலமாக டிரண்ட் ஆகின. இதில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடல் ‘ ரவுடி பேபி’. அந்த பாடலை தனுஷே பாடினார். பாடலின் வரிகள் எளிதாகவும் மற்றும் அனைவரையும் கவரும் வகையில் இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Loading More post
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!