இன்டர்போல் அமைப்பின் முன்னாள் தலைவரின் மனைவி, பிரான்ஸ் அரசிடம் தஞ்சம் கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டர்போல் அமைப்பின் தலைவராக இருந்தவர், சீனாவைச் சேர்ந்த மெங்க் ஹாங்வே (Meng Hongwei). இவ்வமைப்பின் தலைமையகம் பிரான் ஸ் நாட்டில் உள்ள லியான்ஸில் அமைந்துள்ளது. இங்கு தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார், மெங்க். இந்நிலையில் இவர் சீனாவுக்கு சென்றபோது திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் பரபரப்பானது.
இதற்கிடையே சில நாட்கள் கழித்து, லஞ்ச ஊழல் புகார் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்தது. பின்னர் தனது மனைவிக்கு அவர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினார். அதில், ’’எனது அழைப்புக்காக காத்திருக்கவும்’’ என்று கூறியிருந்தார். அதற்கு பின் அவர் பற்றிய தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்டர்போல் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய தலைவராக தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங் யாங், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மெங்க்-கின் மனைவி கிரேஸ், பிரான்ஸ் அரசிடம் தஞ்சம் கோரி மனு கொடுத்துள்ளார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் தனது கார் மர்மநபர்களால் பின் தொடரப்படுவதாகவும் புகைப்படம் எடுக்கப்படுவதாகவும் தான் கடத்தப்படலாம் என சந்தேகிப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.
சீனாவை சேர்ந்த சிலர் தன்னைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதாகவும் மர்ம போன்கால்கள் வருவதாகவும் இதனால் தனக்கும் தன் மகன்க ளின் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!