தொடங்கியது ‘இந்தியன்2’ படப்பிடிப்பு - இந்தியன் தாத்தா வேடத்தில் வந்த கமல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.


Advertisement

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர். கமல் இருவேடங்களில் நடித்த இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார்.


Advertisement

இதன் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
 
ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலும் ‘2.0’ படத்தில் ஷங்கரும் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன்2’ படத்தின் பணிகள் காலதாமதமாகியது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
பின்னர், ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஸன்ஸ்’ ‘இந்தியன்2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து ‘இந்தியன்2’ படத்திற்கான செட் அமைக்கும் பணி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ‘இந்தியன்2’ தான் என்னுடைய கடைசிப் படம் எனவும் அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.


Advertisement

‘இந்தியன் 2’ படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்காக காஜல் அகர்வால் களரி பயிற்சி கற்று வருகிறார். ‘இந்தியன் 2’படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று பொள்ளாச்சியில் தொடங்கியது. அப்போது இந்தியன் தாத்தா வேடத்தில் கமல்ஹாசன் பூஜையில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து உக்ரைனிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement