கின்னஸுக்காக பிரமாண்ட பரதம்: 5000 மாணவிகள் அமர்க்களம்

Guinness-record-Bharatanatyam-in-chennai

சென்னையில் சுமார் 5 ஆயிரம் மாணவ மாணவிகள் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் நடனமாடி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கின்றனர். ஆடவல்லான் இசையகம், லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழு, வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


Advertisement

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 30 திருக்குறள்களை கருவாக கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு 21 நிமிடம் நடனமாடி 4 ஆயிரத்து 525 மாணவிகள் இந்த சாதனையை நிகழ்த்தினர். 600 பரதநாட்டிய ஆசிரியர்களின் பயிற்சிக்கு பிறகு மாணவிகள் இந்த சாதனையை நிகழ்த்தினர்.

இதுகுறித்து பேசிய கின்னஸ் நிறுவன அதிகாரி சொப்னிங் டகரிக்கர், மிகப்பெரிய பாரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. ஏராளமானோர் ஒரே இடத்தில் நடனத்தை அரங்கேற்றியுள்ளனர். இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை 4,525 பேர் முறியடித்து இருக்கின்றனர். பரத நாட்டியத்தில் கின்னஸ் சாதனையும் படைத்திருக்கின்றனர் என்றார்.


Advertisement

ஏற்கனவே திண்டுக்கல்லில் 2 ஆயிரத்து 300 கலைஞர்கள் நிகழ்த்திய லிம்கா சாதனையையும் மகாராஷ்டிராவில் நிகழ்த்தப்பட்ட மாற்றொரு சாதனையையும் முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது இந்த பிரமாண்ட நடனம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement