வருமான வரிக் கணக்கை விரைவாகவும் எளிதாகவும் தாக்கல் செய்யும் வகையில் இணையதள சேவை மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 ஆயிரத்து 241 கோடி ரூபாய் செலவில் வருமான வரிக் கணக்கை விரைவாகவும் எளிதாகவும் தாக்கல் செய்யும் வகையில் இணையதள சேவை மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விரைவான மற்றும் துல்லியமான கணக்கீடுகள் சாத்தியமாவதுடன் வருமான வரிதாரர்கள் செலுத்திய உபரி தொகையை விரைந்து பெறவும் வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பங்களுடன் வருமான வரிதாரரின் வங்கிக் கணக்கில் உபரி தொகையை செலுத்தும் வகையில் புதிய வசதி இருக்கும் என்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் தொடர்பான விவரங்களை பெற ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள மத்திய அரசு, நவீன மின்னணு ஊடகங்கள் மூலம் வருமான வரிதாரர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நடைமுறை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தவிர நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பு, கல்வி சேவைகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 639 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், ''13 பல்கலைக்கழகங்களை மேம்படுத்த கட்டுமைப்புகளை உருவாக்கும் பணி 36 மாதங்களில் நிறைவடையும் . இந்தியா - மாலத்தீவு இடையே எளிதாக சென்று வர ஏற்படுத்தப்பட்ட விசா தொடர்பான ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
Loading More post
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?