“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேட்டியளித்த பின்னர் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி உட்பட 4 நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து பல குறைகளை கூறினர். அப்போது நாடு முழுவதும் அது பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகள் பேட்டியளித்த பின்னரும் கூட இது வரையில் அந்த குறைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குறை கூறியுள்ளார். லோதா ஏப்ரல் 27, 2014 முதல் செப்டம்பர் 27, 2014 வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய லோதா, “கடந்த வருடம் தற்போதைய தலைமை நீதிபதிகள் உட்பட 4 மூத்த நீதிபதிகள் ஊடகத்திடம் உச்சநீதிமன்றத்தின் குறைகளை கூறினர். அவர்கள் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக குரல்களை எழுப்பினர். அத்துடன் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது, கொலிஜியம் மூலம் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவது சரியாக இல்லை என குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால் அந்த பேட்டிக்கு பின்னர் இதுவரையில் அந்த குறைகளுக்கு தீர்வு காணப்படவில்லை” என்றர். அப்போது பேட்டியளித்த நீதிபதிகளில் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தவிர மற்ற மூவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். 

தொடர்ந்து பேசிய அவர், “அப்போதைய கோரிக்கைகள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றாக உச்சநீதிமன்ற நடைமுறைகள் எதிரானவையாக மாறிவருகின்றன. எனக்கு அங்கு மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. குறைந்தபட்சம் மக்களுக்காவது அதை தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஊடகத்தை சந்தித்ததற்கான தேவை என்பதே தற்போது அர்த்தமற்றுபோனது. நாம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. தற்போது அரசு முடிவுகளை எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறது. ஒட்டுமொத்த கருத்துகள் மற்றும் எதிர்வினைகள் பார்த்து, அதனை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை. அனுபவம் குறைந்தவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யப்படுவதும், மூத்த நீதிபதிகள் கொலிஜியத்தின் பட்டியலில் இருந்தும் தேர்வு செய்யப்படாததும் ஆச்சர்யமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com