ஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயற்கையின் விந்தைகளில் ஒன்றான சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நிகழவிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 


Advertisement

குளிர்காலத்தில் வரும் பௌர்ணமியை அமெரிக்க மக்கள் ''வுல்ஃப் மூன்'' என்று அழைக்கின்றனர். சூரியனுக்கு, நிலாவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலாவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். இதனை 'ப்ளட் மூன்' என்கிறோம். 


Advertisement

இந்த ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் என்பதுதான் 'சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்' ஆகும். இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என கூறப்படுகிறது.

இந்திய நேரப்படி ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகண நிகழ்வானது மூன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆசியாவில் பல இடங்களிலும் இந்த 'சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்' தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே 26ம் தேதி தான் தோன்றும். கடந்த வருடம் ஜூலை 27ம் தேதி ப்ளட் மூன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement