சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் ஆனந்த் நாராயணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மிந்த்ரா ஆன்லைன் நிறுவனத்தின் சிஇஓவான ஆனந்த் நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Advertisement

அமெரிக்காவின் வர்த்தக நிறுவனமுமான வால்மார்ட் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது மிந்த்ரா மற்றும் ஜபாங் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆனந்த் நாராயணன் பணியாற்றிவந்தார். அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மிந்த்ரா நிறுவனம், தனது சொந்தக்காரணங்களுக்காக மிந்த்ரா மற்றும் ஜபாங் நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. ஆனந்த் நாராயணன் இடத்தை நிரப்ப தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியில் இருக்கும் அமர் நாகராம்மை நியமிக்க வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஃபேஷன் ஆடைகளை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ராவை விலைக்கு வாங்கியது பிளிப்கார்ட். அப்போது அந்நிறுவனத்தின் சிஇஓவாக ஆனந்த் நாராயணன் நியமிக்கப்பட்டார். ஒரே வருடத்தில் நஷ்டத்தில் இருந்த மிந்த்ராவை, ஆனந்த் நாராயணன் லாபத்தை நோக்கி அழைத்துச்சென்றார். மிந்த்ரா நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆனந்த் நாராயணனின் பங்கு மிக முக்கியமானது என வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பிறந்த ஆனந்த் நாராயணன் சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர். தன்னுடைய இளமை காலத்தை பெங்களூரில் கழித்தவர் ஆவார். தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ள ஆனந்த், ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், நன்னடத்தை குற்றச்சாட்டு காரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த பின்னி பன்சாலின் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement