[X] Close

“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் கால தாமதம் ஆவதற்கு திமுக தான் காரணம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 


Advertisement

திண்டுக்கல்லில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்குவதை தாங்கிக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின், கிராமங்கள் தோறும் சென்று ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இவ்வளவு காலம் தாமதம் ஆனதற்கு திமுகதான் காரணம். அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாகத்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் போனது என தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement