‘’அவ்வளவு பேமஸாவா ஆயிட்டோம்?’’ என்று வடிவேலு கேட்பார் ஒரு படத்தில். அப்படித்தான் வெட்கத்தோடு கேட்கிறார், துபாயில் வசிக்கும் கேரளப் பெண் ஹாசின்!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக துபாய்-க்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார் ராகுல் காந்தி. நேற்று முன் தினம் அங்கு சென்ற அவருக்கு ஏராளமான வரவேற்பு.
நேற்று காலை துபாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, பின் துபாய் ஜெபல் அலி தொழிற்பேட்டை அருகில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முன் பேசினார். பின்னர் அவருடன் கைகுலுக்கி தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.
இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதில் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினார். அதைக் கேட்க, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கூடி இருந்தனர்.
பின்னர், அமீரக துணை அதிபரும், ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.முன்னதாக, துபாய் விமான நிலையத்தில் ராகுலை காண கூட்டம் முண்டியடித்தது. பலர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அதில் ஒரு பெண் செல்ஃபி எடுத்தார். அவர் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் ராகுல் காந்தி பதிந்திருந்தார். இதனால் அந்தப் புகைப் படம் வைரலானது. பல்வேறு பத்திரிகைகளில் அந்தப் புகைப்படம் இடம்பெற்றதையடுத்து அந்த செல்ஃபி பெண், பிரபலமானார்.
அவர் துபாய் விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் என்று பலர் தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர் கேரள மாநிலம் காசர்கோ டைச் சேர்ந்த ஹாசின் அப்துல்லா என்பது பிறகு தெரிய வந்தது. துபாயில் வசித்து வரும் அவர், அங்கு ’எவர்கிரீன் ஈவன்ட்ஸ்’ என்ற நிறு வனத்தை நடத்தி வருகிறார்.
‘’அந்த புகைப்படம் வெளியானதில் இருந்து போன் சத்தம் ஓயவில்லை. தொடர்ந்து ஏகப்பட்ட அழைப்புகள். ஒரே நாளில் இவ்வளவு பிரபல மாவேன் என நினைக்கவில்லை’’ என்கிறார் ஹாசின்!
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?