முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஊழல் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய புலனாய்வு ஆணையத்தின் கண்காணிப்பாளரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஏ.கே பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தும் மத்திய புலனாய்வு ஆணையத்தின் கண்காணிப்பாளராக ஏ.கே. பட்நாயக்கை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதற்கிடையே அலோக் வர்மாவின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவரது அனைத்து அதிகாரங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதனால் அவர் மீண்டும் பணியில் சேர்ந்து 10 அதிகாரிகள் பணிமாற்றம் ரத்து, 5 அதிகாரிகள் பணிமாற்றம் என அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார்.
பின்னர் அவர் மீதான ஊழல் குற்றாச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி, நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடங்கிய குழு முடிவினை வெளியிட்டது. இதில் கார்கே தவிர மற்ற இருவரும், வர்மாவை நீக்கும் முடிவை எடுத்ததால், அவர் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையின் இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் அந்தப் பதவியை அவர் ஏற்காமல் ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் மத்திய புலனாய்வு ஆணையத்தின் அறிக்கையில் உள்ள தகவல்களில் தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என அந்த ஆணையத்தின் கண்காணிப்பாளரான ஏ.கே பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில நாளிதழிடம் பேசியுள்ள பட்நாயக், “அலோக் வர்மாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த விசாரணை முழுக்க சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா அளித்துள்ள புகாரின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய புலனாய்வு ஆணையம் அளித்திருப்பது இறுதி அறிக்கையும் அல்ல. அதில் உள்ள தகவல்களில் என்னுடையது எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்