முறை தவறிய உறவை கண்டித்த தாய் ! தீ வைத்து கொன்ற மகள் 

Daughter-set-ablaze-her-mother-for-interrupting-in-extra-marital-affair

சென்னை அருகே முறை தவறிய உறவை கண்டித்ததால் தூங்கிக் கொண்டிருந்த போது பெற்ற தாயையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய மகளை போலீஸார் கைது செய்தனர். 


Advertisement

தகாத உறவு க்கான பட முடிவு

சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியம் துர்கா நகரில் வசித்து வருபவர் பூபதி (60). இவரது மகள் நந்தினி(27) இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த முருகன்( 49) என்பவருடன் நந்தினி தகாத உறவு வைத்திருந்தார். இது அவரது தாய் பூபதிக்கு தெரிந்ததால் நந்தினியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் பூபதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, பின்னர் தனது தாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வதாக வெளியில் வந்து கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனே அவரது தாயை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


Advertisement

தீ வைத்து கொன்ற மகள் க்கான பட முடிவு

70% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பூபதி மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து குரோம்பேட்டை போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில் பூபதியின் வீட்டருகே உள்ளவர்கள் போலீசாருக்கு இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூற போலீசார் நந்தினியின் செல்போன் விவரங்களை சேகரித்தனர். அப்போது முருகன் என்பவருக்கு அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே நந்தினியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.காவல் துறை விசாரணையில் தகாத உறவிற்கு தாய் பூபதி இடையூறாக இருந்ததால் முருகன் கொலை செய்து விட கூறியதன் பேரில் நந்தினி பூபதியை கொலை செய்தது தெரியவந்தது. நந்தினியின் வாக்குமூலம் அடிப்படையில் நந்தினி மற்றும் முருகனை கைது செய்தனர். பின் 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைதவறிய உறவிற்கு இடையூறாக இருந்த தாயை,  மகளும் கள்ள காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement