'ஒரு புனிதத் தலம் சுற்றுலாத்தலமாகி வருகிறது' சபரிமலை குறித்து சசி தரூர் சாடல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பியாக இருப்பவர் சசி தரூர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வெளியுறுவத் துறை அமைச்சராகவும் சில காலம் பதவி வகித்திருந்தார். ஆனால், சொந்த வாழ்கையில் பல்வேறு சரச்சைகளுக்கு சொந்தக்காரராண சசி தரூர், சபரிமலை விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு வாய் திறக்காமல் இருந்தார். இப்போது முதல் முறையாக சபரிமலை விவகாரம் குறித்து பேசியும், கட்டுரையும் எழுதியுள்ளார். சபரிமலை விவகாரம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிலைபாடும், அகில இந்திய அளவில் ஒரு நிலைபாடும் இருக்கிறது. சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு கேரள காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களையும் நடத்தி வருகிறது.


Advertisement

Image result for sabarimala

ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நிலைபாடு வேறாக இருக்கிறது. அண்மையில் மத்திய பிரதேச தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி "சபரிமலை பிரச்னை என்பது உணர்வுப் பூர்வமான விஷயம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அனைத்து ஆண்களும், பெண்களும் சமம். அனைத்து பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் கேரள மக்களின் உணர்வுகளை அம்மாநில காங்கிரஸ் பிரதிபலிக்கிறது" இவ்வாறு தன்னுடைய கருத்தாகத்தான் முன் வைத்தார் ராகுல் காந்தி. ஆனால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் எவரும், சபரிமலை குறித்து தங்களது கருத்தை முழுதாக முன் வைக்கவில்லை. 


Advertisement

Image result for rahul gandhi and sabarimala

இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் விரிவாகவே பேசியுள்ளார் அதில் "தமிழகத்தின் கன்னியாகுமரியில் 1000 ஆண்டு பழமையான குமரி அம்மன் கோவில் இருக்கிறது. அங்கு பெண்கள் மட்டும்தான் வழிபடுவார்கள். ஆண்கள் குமரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிப்பாடு நடத்த அனுமதியில்லை. அது அந்தக் கோயிலுக்கு என இருக்கும் பாரம்பரியம், சடங்கு. பாலின சமத்துவம் என்ற பெயரில் ஆண்கள் அனைவரும் போராடி கோயிலுக்கு நுழைய அனுமதி வேண்டும் என கேட்டால் நன்றாக இருக்குமா ?, சபரிமலை சம்பிரதாயம் என்பது மத நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது ஆனால், இப்போது அது கேள்வி கேட்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார். 

Image result for shashi tharoor sabarimala


Advertisement

மேலும் இது குறித்து தொடர்ந்த சசி தரூர் " சபரிமலையில் இருக்கும் ஆண்டவனையும், அதன் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எந்தப் பெண்கள் உண்மையாக நம்புகின்றனறோ அவர்கள் 50 வயது வரை ஐயப்பனை தரிசிக்க காத்திருப்பார்கள். ஐயப்பன் மீது நம்பிக்கையில்லாதவர்கள் 50 வயது வரை காத்திருக்கமாட்டார்கள். இப்போது சபரிமலையில் நுழைந்த பெண்கள் எல்லோரும் நம்பிக்கையில்லாதவர்கள்தான். இப்போது சபரிமலை முரண்பட்டு நிற்கிறது, லட்சக் கணக்கான மக்களால் புனிதமாக பார்கக்கப்பட்ட இறைவனின் தலம், இப்போது சுற்றுலாத்தளமாகி வருகிறது" என கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.

Image result for shashi tharoor sabarimala

இன்னும் விரிவாக மேற்கத்திய மத நம்பிக்கை குறித்து பேசிய சசி தரூர் "மேற்கத்திய நாடுகளில் மதம் தொடர்பான விதிகளை மத அமைப்புகளே தீர்மானிக்கின்றன. அதை அரசாங்கமோ நீதிமன்றமோ மாற்றவிட முடியாது. உதாரணத்துக்கு பாலின சமத்தும் பேசுபவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். கிறிஸ்துவ கத்தோலிக்க திருச்சபைகளில் பெண் பாதிரியார்கள் நியமிக்கப்படுவதில்லை, ஆனால் ஏஞ்சலிக்கன் திருச்சபைகளில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் பாதிரியார்களாகவும், பேராயர்களாகவும் இருக்கின்றனர்" என தெரிவித்துள்ளார் சசி தரூர்.

Courtesy: Timesnownews.com

loading...

Advertisement

Advertisement

Advertisement