பாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுமித்ரா

Setback-for-Mamata-Banerjee--TMC-MP-Soumitra-Khan-joins-BJP

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுமித்ரா கான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.


Advertisement

முன்னதாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவை சவுமித்ரா கான் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சவுமித்ரா கான், மேற்கு வங்காளத்தில் தற்போது ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை என்றும் காவல்துறையின் ராஜ்ஜியமே நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். போலீஸ் அதிகாரிகள் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.


Advertisement

நரேந்திர மோடியால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புவதாகவும், எனவே பாரதிய ஜனதாவில் இணைவதாகவும் சவுமித்ரா கான் தெரிவித்தார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா அதிக கவனம் செலுத்தும் சில மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று. இம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் 22-ல் வெல்ல பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ‌திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே சவுமித்ரா கான் தவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 5 எம்.பி.க்களும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியை சேர்ந்த முகுல் ராய் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement