தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினாலும் இப்போதுள்ள நிலையில் அவர்க ளால் அணியை மாற்ற முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது, விராத் கோலி தலைமையிலான இந்திய அணி. 71 ஆண்டுக்குப் பின் இந்த சாதனையை படைத் துள்ள இந்திய அணியை, முன்னணி வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன், டிம் பெய்ன் கூறும்போது, ‘’டெஸ்ட் தொடர் தொடங்கும்போது வெற்றி பெற்று விடு வோம் என்றே நினைத்தோம். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களை தோற்கடித்துவிட்டனர். ஸ்மித்தும், வார்னரு ம் இல்லாததை நாங்கள் உணர்கிறோம்’’ என்று கூறியிருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. இந்திய வீரர்கள் விராத் கோலி, புஜாரா, ரிஷாப் ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.
(ஸ்மித், வார்னர்)
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ‘’பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப் பட்டுள்ள ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பினால், எல்லாம் மாறும் என நினைக்கிறார்கள். அப்படி நினைத்தால், அவர்கள் தங்களை தாங்களே கலாய்த்துக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி முழுவதுமாக முன்னேற வேண்டியுள்ளது. அந்த அணி, நீண்ட நேரம் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம்.
(மைக்கேல் வாகன்)
பேட்டிங் பிட்ச்களில் கூட அந்த அணி தடுமாறுகிறது. சமீபகாலமாக நீண்ட இன்னிங்ஸை அந்த பேட்ஸ்மேன்கள் விளையாடவில்லை. பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி இல்லை. அடுத்து இங்கிலாந்தில் நடக்க இருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நினைக் க வில்லை. இங்கிலாந்தை, இங்கிலாந்து மண்ணில் வெல்ல வேண்டும் என்றால் பந்துவீச்சு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்’’ என்று தெரி வித்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்