[X] Close >

யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு?

Who-will-be-the-chance-of-Reservation

நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை அடுத்து பொருளாதார ரீதியில் நலிந்தவர்கள் யார் என்பதற்கான சில‌ வரையறைகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு கிடைக்கும் நிலை ஏற்பட உள்ளது. விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துகள் மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர் யார் என வரையறுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Image result for பொருளாதார ரீதியில் நலிந்தவர்கள்


Advertisement

ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பை 50% இருந்து 60% அதிகரிக்க வசதியாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு ‌8 லட்சம் ரூபாய்க்கு ‌கீழ் வருமானம் உள்ளவர்கள் பொருளாதார‌ ரீதியில் நலிவுற்றோர் பிரிவில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. இது தவிர 5 ஏக்‌கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்போருக்கும் இட ஒதுக்கீடு பலன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. 

Image result for சிறப்பு ஒதுக்கீடு

மேலும்‌ ஆயிரம் சதுர அடிக்கு கீழ் வீடு உள்ளவர்களை மட்டுமே பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாக கருத மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே இட ‌ஒதுக்கீடு பலன் வ‌ழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close