இட ஒதுக்கீடு நடைமுறையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்க வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மக்களவையிலும் நாளை மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இதற்காக மாநிலங்களவை கூட்டம் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு கிடைக்கும் நிலை ஏற்பட உள்ளது. விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துகள் மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர் யார் என வரையறுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் மத்திய அரசின் முடிவு மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்