“ஜடேஜாவும், அஸ்வினும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்” - குல்தீப் புகழாரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றுவதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துவிட்டது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் 4வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை வென்றுவிட முடியும்.


Advertisement

சிட்னி போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இதில் குல்தீப் 5 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

       


Advertisement

இந்தத் தொடரில் தொடக்கம் முதலே பும்ரா, முகமது சமி உள்ளிட்ட வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை செலுத்தினார்கள். இருப்பினும், சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்ற கருத்து நிலவியது. ஜடேஜா தன்னுடைய பங்கிற்கு ஆல்ரவுண்டராக ஜொலித்தார். அஸ்வினும் விக்கெட்களை எடுத்தார். முதல் போட்டியில் அஸ்வினும் 3 விக்கெட்களை எடுத்தார். காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. 4வது போட்டியில் அஸ்வின் உடன் குல்தீப் களமிறக்கப்பட்டார். களமிறங்கிய முதல் இன்னிங்சிலே 5 விக்கெட்களை சாய்த்து அவர் அசத்தியுள்ளார்.

              

இந்நிலையில், பயிற்சியின் போது அஸ்வின், ஜடேஜா தம்மை சிறப்பாக ஊக்கப்படுத்தியதாக குல்தீப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அஸ்வின், ஜடேஜா அணியில் இருக்கும் போது, நீங்கள் மூன்றாது ஸ்பின்னர். அவர்களிடம் இருந்து நிறை ஆலோசனைகளை பெற முடியும். அவர்கள் பயிற்சியின் போது என்னை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தி வந்தார்கள். ‘நீங்கள் இந்த முறையில், இந்தப் பகுதியில் பந்துவீச வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஐடியாக்களை கூறினர். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. அவர்கள் நிறைய போட்டிகள் விளையுள்ளார்கள். நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.


Advertisement

      

இரண்டு ஸ்பின்னர்கள் விளையாடும் போது, இரண்டு பக்கத்தில் இருந்தும் நெருக்கடி கொடுக்க வேண்டியது முக்கியமானது. ஜடேஜா விரைவாக நல்ல லைனில் பந்துவீசினார். அதனால், மற்ற வீரர்கள் லைன் வெவ்வேறான போட்டு பரிசோதனை செய்ய வாய்ப்பு இருந்தது” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement