ஜெயலலிதாவுக்கு ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை? - ஆணையத்தில் ராதாகிருஷ்ணன் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக, தமக்கு தெரிந்தவற்றை மனசாட்சிக்கு உட்பட்டு விசாரணை ஆணையத்தில் கூறியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Advertisement

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூன்றாவது நாளாக ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள்தான் கூறியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சாட்சியம் அளித்தாக தெரிவித்தார். 

            


Advertisement

சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தால் இந்திய மருத்துவத்துறைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடும் என்பதால், அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லவில்லை என்ற அர்த்தத்தில் தாம் கூறவில்லை என ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்ததாகவும் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement