மின்கோபுரத்திற்கு பதிலாக பூமிக்கடியில் மின் கேபிளை அமைக்க வாய்ப்பில்லை எனவும் 800 கிலோவாட் மின்சாரத்திற்கான கேபிளை பூமிக்கடியில் புதைப்பது சாத்தியமற்றது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பேரவையில் எதிர்கட்சிகளின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்கோபுரத்திற்கு பதிலாக பூமிக்கடியில் மின் கேபிளை அமைக்க வாய்ப்பில்லை எனவும் 800 கிலோவாட் மின்சாரத்திற்கான கேபிளை பூமிக்கடியில் புதைப்பது சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் “ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது. சத்தீஸ்கரில் இருந்து 4000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 400 கிலோவாட் கேபிளை 41 கி.மீ வரை பூமிக்கடியில் பதிக்கும் திட்டமே இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. புதைத்தட வழியாக மின்சாரம் கொண்டுசெல்வது இயலாத காரியம். தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அரசியலுக்காகவே உயர்மின் கோபுரம் குறித்து விவசாயிகளிடம் தவறான தகவல் பரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை எதிர்க்கவில்லை. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். 800 கிலோவாட் மின்சாரத்தை உயர்மின் கோபுரம் வழியாகதான் கொண்டு செல்ல முடியும் என்பதை ஏற்கிறேன். ஆனால் திட்டத்தை இரண்டாக பிரித்து 400 கிலோ வாட் மின்சாரத்தை பூமிக்கடியில் கேபிள் பதித்து கொண்டு செல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி அதிகபட்சமாக 350 கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்லவே கேபிள் உள்ளதாகவும் பூமிக்கடியில் கேபிள் பதிக்க வேண்டுமெனில் திட்ட மதிப்பை விட 10 மடங்கு கூடுதல் செலவாகும் எனவும் தெரிவித்தார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?