[X] Close >

கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ்

Rescue-the-kidnapped-Indians--sushma-swaraj

கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.


Advertisement

ஏமனிலிருந்து துபாய்க்கு சென்ற இந்திய கப்பலை, சோமாலிய கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். அதில் இருந்த 10 இந்தியர்களையும் அவர்கள் கடத்தி சென்றனர். பின் சரக்கு கப்பல் மட்டும் மீட்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர், அல் கவுசர் கப்பலிலிருந்து சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 10 இந்தியர்களும் மீட்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த சோமாலிய அரசு, கால்முடக் மாநில அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எனது நன்றி. கென்யாவுக்கான இந்திய அதிகாரி சுசித்ரா துரையின் முயற்சிக்கு பாராட்டுக்கள்’ என்று கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close