பாகிஸ்தான் அணியில், தான் இணைவதை ஷாகித் அப்ரிடி தடுக்கிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, முகமது ஆமிர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் மூன்று பேருக்கும் தலா 5 வருடம் தடை விதிக்கப் பட்டது. தடை முடிந்த பின் முகமது ஆமிர், பாகிஸ்தான் அணிக்கு திரும்பிவிட்டார். முன்னாள் கேப்டனான சல்மான் பட், ஆசிப் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
Read Also -> "எனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள்" சச்சின் உருக்கம்
இதுபற்றி சல்மான் பட் கூறும்போது, ‘’2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் நான் இடம்பிடித்திருப்பேன். கேப்டனாக இருந்த அப்ரிடி அதைத் தடுத்தார். தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் ஆகியோர் என்னை வலைப்பயிற்சி எடுக்கச் சொல்லி உடற்தகுதியை சோதனை செய்தனர். வக்கார் யூனிஸ் ‘‘பாகிஸ்தான் அணிக்காக விளையாட மனதளவில் தயாரா?’’ என்று கேட்டார். ‘‘தயார்’’ என்றேன்.
Read Also -> கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங், மீண்டும் சொதப்பினார் கே.எல்.ராகுல்
ஆனால், கேப்டனாக இருந்த அப்ரிடி நான் அணிக்கு திரும்புவதை தடுத்துவிட்டார். அவரைத் தூண்டியது யார் என்பது தெரியாது. இதுபற்றி அவரிடம் நான் பேசவில்லை. 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் என்று நினைத்தேன். அதிலும் இடம் கிடைக்கவில் லை. அணி நிர்வாகம் என்னிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி