ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது - ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. 


Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், 3 வாரங்களுக்குள் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Advertisement

                  

இதனிடையே, துண்டிக்கப்பட்ட மி்ன் இணைப்பை வழங்க வேண்டும், பராமரிப்புப் பணிகளுக்காக ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 

ஆலையத் திறக்க வேண்டும் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதைச் சுட்டிக் காட்டி, வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றிருப்பதால், பராமரிப்புப் பணிகளுக்காக ஆலையைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க இயலாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement