ஜனவரி 18ல் ‘இந்தியன்2’படப்பிடிப்பு ஆரம்பம்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும்  ‘இந்தியன்2’ படப்பிடிப்பு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. கமல் இருவேடங்களில் நடித்த இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார்.


Advertisement

இதன் வெற்றியை தொடர்ந்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலும் ‘2.0’ படத்தில் ஷங்கரும் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன்2’ படத்தின் பணிகள் காலதாமதமாகியது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். 
பின்னர், ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஸன்ஸ்’ ‘இந்தியன்2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.


Advertisement

இதையடுத்து ‘இந்தியன்2’ படத்திற்கான செட் அமைக்கும் பணி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. ‘இந்தியன்2’ தான் என்னுடைய கடைசிப் படம் எனவும் அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

‘இந்தியன்2’படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  இதற்காக காஜல் அகர்வால் களரி பயிற்சி கற்று வருகிறார். இந்தப் படத்தின் மூலம் காஜல் முதன்முறையாக கமலுடன் இணைய இருக்கிறார். அதோடு அவரது திரை வாழ்வில் ஷங்கர் இயக்கத்திலும் முதன்முறையாக இணைந்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ‘இந்தியன்2’படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில் ‘இந்தியன்2’ திரைப்பட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதமே தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 18 ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து உக்ரைனிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் 2020 ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement