புத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புத்தாண்டு பரிசாக மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 5 ரூபாய் 91 காசுகள் குறைகிறது. 


Advertisement

சமையல் எரிவாயு விலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்‌வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. அதன்படி, ‌மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 


Advertisement

அதேபோல், மானியம் அல்லாத சிலிண்டரின் விலை 120 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த ஜூன் மாதம் முதல் ஏறுமுகத்தில் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 6 ரூபாய் 52 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக இந்த மாதமும் 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்பட்டிருக்கிறது

loading...

Advertisement

Advertisement

Advertisement